தேனி போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராஜா தலைமையில் போலீசார் தேனி அரண்மனைப்புதூர் விலக்கு பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள பஸ் நிறுத்தத்தில் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த நபரை பிடித்து அவர் வைத்திருந்த பையை சோதனையிட்டனர். அதற்குள் 2 கிலோ 200 கிராம் கஞ்சா இருந்தது. விசாரணையில் அவர் அரப்படித்தேவன்பட்டியை சேர்ந்த சுப்புராஜ் மகன் போஸ் (வயது 32) என்பதும், விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததும் தெரிய வந்தது. கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து போசை கைது செய்தனர்.