மயிலாடுதுறை மாவட்டம் திருவிழந்தூர் ஆடிய பிள்ளையார் கோவில் தெருவில் கஞ்சா விற்பனை நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து மயிலாடுதுறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் அதே பகுதியைச் சேர்ந்த சங்கர் மகன் சந்துரு (வயது 20) என்பதும், கஞ்சா விற்றதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார், போதைப்பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சந்துருவை கைது செய்து அவரிடம் இருந்த ½ கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.