கஞ்சா விற்றவர் கைது

கஞ்சா விற்றவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-10-03 20:00 GMT

மேச்சேரி:-

நங்கவள்ளி அருகே சின்ன சோரகை கொசப்பட்டி பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் நங்கவள்ளி போலீசார் அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது போலீசாரை கண்டதும் 2 பேர் தப்பி ஓடினர். அதில் ஒருவரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அவர் அதே பகுதியை சேர்ந்த ரமேஷ் (வயது 45), தப்பி ஓடியவர் ராமு (27) என்பது தெரியவந்தது. இதையடுத்து ரமேசை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய ராமுவை தேடி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்