கஞ்சா விற்றவர் கைது

கண்மாய்க்கரை பகுதியில் கஞ்சா விற்றவர் கைது செய்யப்பட்டார்,

Update: 2023-07-22 18:45 GMT

திருப்புவனம், 

திருப்புவனம் போலீஸ் சரகத்தை சேர்ந்த கழுவன்குளம் கிராம பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக திருப்புவனம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவப்பிரகாஷ் மற்றும் போலீசார் அப்பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள கண்மாய்க்கரை பகுதியில் சந்தேகத்திற்கிடமாய் நின்றவரை பிடித்து விசாரணை நடத்தினர்.

அதில் அவர் சிவபாலன் என்ற சிவா(வயது 23) என்பதும், கஞ்சா விற்பனை செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து விற்பனைக்கு வைத்திருந்த 100 கிராம் கஞ்சா, மோட்டார்சைக்கிளை பறிமுதல் செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்