6 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

நெல்லை மாவட்டத்தில் 6 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

Update: 2023-06-15 18:53 GMT

நெல்லை மாவட்டத்தில் 6 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

வாலிபர் கொலை

அம்பை அருகே உள்ள வாகைகுளம் பகுதியில் கடந்த 14.5.2023-ம் அன்று பிரம்மதேசத்தை சேர்ந்த முப்பிடாதி (வயது 31) என்பவர் முன்விரோதம் காரணமாக அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

இதுகுறித்து அம்பை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வாகைகுளத்தை சேர்ந்த இசக்கியப்பன் என்ற ராசு (41), சுடலைமணி (23), வேம்பு சுடலை (22), அப்ரானந்தம் என்ற கார்த்திக் (27) ஆகிய 4 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

குண்டர் சட்டம் பாய்ந்தது

இவர்களால் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படும் என்பதால் இவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன், அம்பை போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஷ்குமார் ஆகியோர் கலெக்டருக்கு பரிந்துரை செய்தனர்.

இதை கலெக்டர் கார்த்திகேயன் ஏற்று இசக்கியப்பன் என்ற ராசு, சுடலைமணி, வேம்பு சுடலை, அப்ரானந்தம் என்ற கார்த்திக் ஆகிய 4 பேரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து அவர்கள் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டதற்கான உத்தரவை பாளையங்கோட்டை சிறை அதிகாரிகளிடம் இன்ஸ்பெக்டர் மகேஷ்குமார் நேற்று வழங்கினார்.

வாட்ஸ்-அப்

இதேபோல் நெல்லை டவுன் மேட்டு தெரு தெற்கு மவுண்ட் ரோடு பகுதியைச் சேர்ந்த முகமது இல்கம் என்ற தேவராஜ் மகன் முகமது அனஸ் என்ற ராஜா (23). இவர் சமூக வலைதளமான வாட்ஸ்-அப்பில் ஸ்டேட்டஸ் ஆக வைத்து இரு தரப்பினருக்கு இடையே பிரச்சினையை தூண்டும் வகையில் வீடியோ பதிவு செய்து பரப்பியதற்காக வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இவரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன், சுத்தமல்லி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜீன்குமார் ஆகியோர் கலெக்டருக்கு பரிந்துரை செய்தனர்.இதை கலெக்டர் கார்த்திகேயன் ஏற்று முகமது அனஸ் ராஜாவை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதற்கான உத்தரவு நகல் பாளையங்கோட்டை சிறையில் அதிகாரியிடம் வழங்கப்பட்டது.

மற்றொருவர்

சேரன்மகாதேவி மூலக்கோவில் தெருவை சேர்ந்த மாரியப்பன் மகன் செல்வகுமார் (22). இவரை சேரன்மாதேவி போலீசார் கொலை முயற்சி, அடிதடி வழக்கில் கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர்.

இவரால் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படும் என்பதால் இவரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, சேரன்மாதேவி போலீஸ் இன்ஸ்பெக்டர் சேக்அப்துல்காதர் ஆகியோர் கலெக்டருக்கு பரிந்துரை செய்தனர். இதை கலெக்டர் ஏற்று, செல்வகுமாரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து செல்வகுமார் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டதற்கான உத்தரவு நகல் சிறை அதிகாரிகளிடம் வழங்கப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்