4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

டாஸ்மாக் மேற்பார்வையாளரை அரிவாளால் வெட்டி பணம் பறித்த வழக்கில் கைதான 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

Update: 2023-03-30 18:45 GMT

டாஸ்மாக் மேற்பார்வையாளரை அரிவாளால் வெட்டி பணம் பறித்த வழக்கில் கைதான 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

அரிவாளால் வெட்டி பணம் பறிப்பு

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள வீதிவிடங்கன் டாஸ்மாக் கடையில் மேற்பார்வையாளராக பணியாற்றி வருபவர் தெட்சிணாமூர்த்தி (வயது53). இவர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு டாஸ்மாக் கடையில் வசூலான ரூ.8 லட்சத்து 45 ஆயிரத்தை நன்னிலத்தில் உள்ள வங்கியில் செலுத்துவதற்காக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது ஸ்ரீவாஞ்சியம் பகுதியில் சென்ற போது முகமூடி அணிந்து வந்த 2 பேர், தெட்சிணாமூர்த்தியை வழிமறித்து அவரை அரிவாளால் வெட்டி அவரிடம் இருந்த பணத்தை பறித்து சென்றனர்.

குண்டர் சட்டம் பாய்ந்தது

இதுகுறித்த புகாரின் பேரில் நன்னிலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஸ்ரீவாஞ்சியம் பகுதியை சேர்ந்த ரமேஷ் (27), அரவிந்தன் (20), அருள்ஜீவா (20) மற்றும் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த முரளிதரன் (25) உள்பட 6 பேரை கைது செய்தனர். இந்த 4 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.

அதன் பேரில் 4 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய கலெக்டர் சாருஸ்ரீ உத்தரவிட்டார். இதை தொடர்ந்து 4 பேரும் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. இதையடுத்து ரமேஷ், அரவிந்தன், அருள்ஜீவா, முரளிதரன் ஆகிய 4 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்து அவர்களை திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்