2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
பாளையங்கோட்டை அருகே 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.;
பாளையங்கோட்டை அருகே உள்ள சீவலப்பேரியை சேர்ந்த ராமர் மகன் அழகுராஜ் (வயது 28) மற்றும் முப்பிடாதி மகன் சின்னதுரை (27). இவர்களை மணல் திருட்டு மற்றும் அடிதடி வழக்கில் சீவலப்பேரி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்து உள்ளனர்.
இந்த நிலையில் அவர்கள் 2 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் பரிந்துரைப்படி கலெக்டர் கார்த்திகேயன் உத்தரவிட்டார். இந்த உத்தரவு நகலை போலீசார் நேற்று பாளையங்கோட்டை மத்திய சிறையில் சமர்ப்பித்தனர்.