2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

குமரியில் பாலியல் வழக்கில் தொடர்புடைய 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.;

Update:2023-01-14 00:15 IST

நாகர்கோவில், 

குமரியில் பாலியல் வழக்கில் தொடர்புடைய 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

குண்டர் சட்டம் பாய்ந்தது

கேரள மாநிலம் மலப்புரம் திர்கினபுரம் கும்மில் வீட்டை சேர்ந்தவர் திஜேஷ் என்ற உன்னி (வயது 38). இவர் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்ததாக மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் வழக்கு உள்ளது.

அதன்பிறகும் அவர் தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்ததால் குண்டா் சட்டத்தில் கைது செய்ய போலீசார் முடிவு செய்தனர். இதற்கான அனுமதி கோரி மாவட்ட கலெக்டர் அரவிந்துக்கு போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் பரிந்துரை செய்தார். பின்னர் கலெக்டர் அரவிந்த் அனுமதி அளித்ததைத் தொடர்ந்து திஜேஷை மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீசார் நேற்று குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.

மற்றொரு சம்பவம்

இதே போல கோழிப்போர்விளையை சேர்ந்த சுஜின் என்ற சுஜின்தாஸ் (36) என்பவர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. இவர் மீதும் மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்தில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.

குமரி மாவட்டத்தில் பாலியல் வழக்கில் தொடர்புடைய 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

Tags:    

மேலும் செய்திகள்