2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
திசையன்விளை, களக்காடு பகுதியில் 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.;
நெல்லை மாவட்டம் திசையன்விளை சுப்பிரமணியபுரத்தில் உள்ள தோட்டத்தில் கடந்த மாதம் நடராஜன் (வயது 60) என்பவர் இடப்பிரச்சினையில் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் சுப்பிரமணியபுரத்தை சேர்ந்த முருகன் (36) என்பவர் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் இவரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதேபோல் களக்காடு கீழதேவநல்லூர் சிவன்கோவில் தெருவை சேர்ந்த கண்ணன் (34) என்பவர் கஞ்சா விற்றதாக களக்காடு போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவரையும் குண்டா் சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தனர். இதனை கலெக்டர் விஷ்ணு ஏற்று முருகன், கண்ணன் ஆகிய 2 பேரையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அதற்கான ஆணையை அந்தந்த போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் நேற்று பாளையங்கோட்டை சிறையில் வழங்கினர்.