2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

13 டன் ரேஷன் அரிசி கடத்திய வழக்கில் தொடர்புடைய 2 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது.

Update: 2022-07-26 12:12 GMT

திண்டுக்கல் குடிமை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கீதா தலைமையிலான போலீசார், கடந்த சில நாட்களுக்கு முன்பு சின்னாளப்பட்டி பகுதியில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது லாரி, 3 வேன்கள் உள்பட 6 வாகனங்களில் ரேஷன்அரிசி கடத்தி செல்வதை கண்டுபிடித்தனர்.

இதையடுத்து கடத்தப்பட்ட 13 டன் 600 கிலோ ரேஷன்அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 6 வாகனங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து சின்னாளப்பட்டியை சேர்ந்த சதீஷ்குமார், பாண்டி ஆகியோரை போலீசார் கைது செய்து திண்டுக்கல் சிறையில் அடைத்தனர்.

இதற்கிடையே 2 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்வதற்கு, கலெக்டருக்கு குடிமை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பரிந்துரை செய்தனர். இதையடுத்து கலெக்டர் விசாகன் உத்தரவின்பேரில், திண்டுக்கல் சிறையில் இருந்த 2 பேரையும் குண்டர் சட்டத்தில் போலீசார் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்

Tags:    

மேலும் செய்திகள்