2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது;

Update:2022-07-07 03:56 IST

நெல்லை டவுன் மாதா பூங்கொடி தெருவைச் சேர்ந்தவர் குமார் பாண்டியன் மகன் சுந்தர் (வயது 24). இவர் நெல்லை சந்திப்பு பகுதியில் கொலைமுயற்சி, பொதுமக்களை அச்சுறுத்துதல் போன்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டு பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்தார். இவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாநகர போலீஸ் துணை கமிஷனர் (மேற்கு) சரவணகுமார், சந்திப்பு உதவி கமிஷனர் அண்ணாதுரை, சந்திப்பு இன்ஸ்பெக்டர் ஷோபா ஜென்சி ஆகியோர் பரிந்துரை செய்தனர். இதையடுத்து மாநகர போலீஸ் கமிஷனர் அவினாஷ் குமார் உத்தரவுப்படி, சுந்தர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் நேற்று அடைக்கப்பட்டார்.இதேபோல் பணகுடி பகுதியை சேர்ந்தவர் கணேசன் (59). இவர் ஒரு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இவரது நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் வகையில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் பரிந்துரையின்பேரில், கணேசனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் விஷ்ணு உத்தரவிட்டார். இந்த உத்தரவு நகலை பாளையங்கோட்டை மத்திய சிறையில் போலீசார் சமர்ப்பித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்