தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது/;

Update:2022-09-03 02:08 IST

சேலம் பழைய பஸ் நிலைய பகுதியை சேர்ந்தவர் செல்வம். சம்பவத்தன்று இவர் வீட்டின் அருகே நடந்து சென்றார். அப்போது அவரை வாலிபர் ஒருவர் வழிமறித்து பணம் பறித்துக்கொண்டு சென்றார். இது குறித்து சேலம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து கிச்சிப்பாளையத்தை சேர்ந்த ஜீவகன் (வயது 29) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் பணம் பறித்ததை ஒப்புக்கொண்டார்.

இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து சேலம் சிறையில் அடைத்தனர். மேலும் போலீசார் விசாரணையில் அவர் தொடர் வழிப்பறியில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து போலீஸ் கமிஷனர் நஜ்முல்ஹோடா உத்தரவிட்டார். இதையடுத்து சேலம் சிறையில் உள்ள ஜீவகனிடம் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கான நகலை போலீசார் வழங்கினர்.

Tags:    

மேலும் செய்திகள்