அண்ணன்-தம்பி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

அண்ணன்-தம்பி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

Update: 2023-05-19 18:45 GMT

கீழ்வேளூர் அருகே சாராய கடத்தலில் ஈடுபட்ட அண்ணன்-தம்பி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

சாராயம் கடத்தல்

நாகை தாலுகா பெருங்கடம்பனூர் காலனி தெருவை சேர்ந்த ராஜேந்திரன் மகன்கள் ராஜேஷ் (வயது 32), தவக்களை சுரேஷ் என்கிற சுரேஷ் (30). இவர்கள் 2 பேரும் பெருங்கடம்பனூர் பகுதிகளில் சாராயம் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வந்தனர். இவர்கள் மீது கீழ்வேளூர் போலீஸ் நிலையத்தில் சாராயம் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. இதுதொடர்பாக 2 பேரும் கைது செய்யப்பட்டு நாகை மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 2 பேரும் தொடர்ந்து சாராயம் கடத்தலில் ஈடுபட்டு வருவதால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கீழ்வேளூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தியாகராஜன், துணை போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் ஆகியோர் நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவஹருக்கு பரிந்துரை செய்தனர்.

குண்டர் சட்டத்தில் கைது

இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு 2 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதனை தொடர்ந்து 2 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் உத்தரவிட்டார். இதையடுத்து கீழ்வேளூர் போலீசார் நாகை சிறையில் இருந்த 2 பேரையும் நேற்று குண்டர் சட்டத்தில் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்