கங்கைமுத்து மாரியம்மன் கோவில் திருவிழா
நாகூர் கங்கைமுத்து மாரியம்மன் கோவில் திருவிழா நடந்தது.
நாகூர்:
நாகூர் அமிர்தா நகரில் உள்ள கங்கை முத்து மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த 30-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பால் காவடி ஊர்வலம் நேற்று காலை நடந்தது. முன்னதாக நாகூர் பண்டக சாலை தெருவில் உள்ள முத்து மாரியம்மன் கோவிலில் இருந்து திரளான பக்தர்கள் பால்குடம், ரதகாவடி, அலகு காவடி எடுத்து கொண்டு ஊர்வலமாக முக்கிய வீதிகளின் வழியாக வந்து கோவிலை அடைந்தனர். பின்னர் அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.