விநாயகர் வீதி உலா

விநாயகர் வீதி உலா நடந்தது.

Update: 2022-08-30 18:34 GMT

தா.பழூர்:

அரியலூர் மாவட்டம், தா.பழூரில் உள்ள விசாலாட்சி அம்மன் உடனுறை விஸ்வநாதர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி விஸ்வநாதர், விசாலாட்சி அம்மன், கோபுர விநாயகர், கன்னி மூலை விநாயகர், சபை விநாயகர், உற்சவர் திருமேனி ஆகிய தெய்வங்களுக்கு பல்வேறு வாசனை திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. பின்னர் சுவாமி, அம்பாள், விநாயகர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். சோடச உபச்சாரங்கள் செய்யப்பட்டது. மங்கள ஆரத்தி நடைபெற்றது. வேத மந்திரங்கள் முழங்க விநாயகர் அகவல் உள்ளிட்ட விநாயகர் துதிகள் பக்தர்களால் பாராயணம் செய்யப்பட்டது. மாலையில் விநாயகர் உற்சவர் திருமேனிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பிரகார உற்சவம் நடைபெற்றது. பின்னர் மங்கள வாத்தியம் முழங்க ராஜ வீதிகளில் விநாயகர் திருவீதி உலா காட்சி நடைபெற்றது. வீதி உலாவின்போது பக்தர்கள் வீடுகள் தோறும் தீபாராதனை செய்தனர். விடையாற்றி உற்சவத்துக்கு பிறகு வசந்த மண்டபத்தில் எழுந்தருளிய விநாயகருக்கு மகா தீபாராதனை நடைபெற்றது. நிகழ்ச்சியில் தா.பழூர் பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்