சிவகிரி:
சிவகிரியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 15-வது வார்டு அண்ணா நடுத்தெரு சர்க்கரை விநாயகர் கோவில் முன்பாக வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைக்கு பூஜைகள் செய்து வழிபட்டனர். பின்னர் விநாயகர் சிலைக்கு தீபாராதனை செய்து டிராக்டரில் வைத்து மேளதாளத்துடன் அண்ணா வடக்கு தெரு, பெரியார் கடை பஜார், அண்ணா தெற்கு தெரு, அண்ணா வாழையடி தெரு, அண்ணா காலணி தெரு வழியாக வலம் வந்தனர். தொடர்ந்து செக்கடி வழியாக ராஜசிங்கப்பேரி கண்மாயில் விநாயகர் சிலையை கொண்டு சென்று கரைத்தனர்.