விநாயகர் சிலைகள் ஊர்வலம்

அருப்புக்கோட்டையில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடைபெற்றது.

Update: 2023-09-19 19:41 GMT

அருப்புக்கோட்டை, 

அருப்புக்கோட்டையில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடைபெற்றது.

சிலைகள் ஊர்வலம்

அருப்புக்கோட்டையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்து முன்னணி சார்பில் பாளையம்பட்டி, மணிநகரம், காந்தி மைதானம், புளியம்பட்டி உள்ளிட்ட 11 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்தன. இந்த சிலைகள் அனைத்தும் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கண்மாயில் கரைக்கும் நிகழ்ச்சி நேற்று மாலை நடைபெற்றது.

ஊர்வலம் தொடங்கியதும் லேசாக மழை பெய்தது. துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அருகே தொடங்கிய இந்த ஊர்வலம் கொட்டும் மழையில் மெயின்பஜார், பந்தல்குடி ரோடு உள்ளிட்ட நகரின் முக்கிய வீதிகள் வழியாக வந்து பெரிய கண்மாயில் சிலைகள் அனைத்தும் கரைக்கப்பட்டன.

பாதுகாப்பு பணி

விநாயகர் சிலை ஊர்வலத்தை முன்னிட்டு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தண்ணீரை பீய்ச்சி அடிக்கும் வஜ்ரா வாகனங்கள், கண்ணீர் புகை குண்டு வீசும் வாகனங்கள், தீயணைப்பு வாகனங்கள் நிறுத்தப்பட்டு இருந்தன.

மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாச பெருமாள் தலைமையில் 3 கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு, 5 துணை போலீஸ் சூப்பிரண்டு, 15 இன்ஸ்பெக்டர்கள் முன்னிலையில் 800-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்