விநாயகர் சிலைகள், நீர்நிலைகளில் கரைப்பு

விநாயகர் சிலைகள், நீர்நிலைகளில் கரைப்பு;

Update:2022-09-03 22:14 IST

வாய்மேடு

வாய்மேடு பகுதிகளில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 38 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. இதில் இதுவரை 16 சிலைகள் ஆற்றில் கரைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் நேற்று தகட்டூர் பண்டாரதேவன்காடு பகுதியில் பிரதிஷ்டை செய்யப்பட்ட சித்தி விநாயகர் ஊர்வலமாக புறப்பட்டு தகட்டூர் நடுக்காடு, கோவிந்தன் காடு, ராமகோவிந்தன் காடு, தகட்டூர் கடை தெரு, சமத்துவபுரம், சுப்பிரமணியன் காடு வழியாக கொண்டு வரப்பட்டு முள்ளிஆற்றில் கரைக்கப்பட்டது. இதில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர். .இதே போல தாணிக்கோட்டகம் சின்ன கடைத் தெருவில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த வெற்றி விநாயகர் ஊர்வலம் நடந்தது. இதில் தாணி கோட்டகம் கடைத்தெரு, குட்டி தேவன் காடு, சேக்குட்டி தேவன்காடு வழியாக சென்று தாணிக்கோட்டகம் தெற்கு பகுதியில் அமைந்துள்ள நைனா குளத்தில் கரைக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்