சதுர்த்தி விழாவை முன்னிட்டு ஆந்திராவில் இருந்து ராமேசுவரம் வந்த விநாயகர் சிலைகள்

விநாயகர் சதுர்த்தி வருவதை முன்னிட்டு ஆந்திராவிலிருந்து ராமேசுவரம் பகுதிக்கு விநாயகர் சிலைகள் கொண்டுவரப்பட்டு உள்ளன.

Update: 2023-09-08 18:45 GMT

ராமேசுவரம்,

விநாயகர் சதுர்த்தி வருவதை முன்னிட்டு ஆந்திராவிலிருந்து ராமேசுவரம் பகுதிக்கு விநாயகர் சிலைகள் கொண்டுவரப்பட்டு உள்ளன.

விநாயகர் சதுர்த்தி

தமிழகம் முழுவதும் வருகின்ற 18-ந் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகின்றது. அது போல் ஆண்டுதோறும் இந்து முன்னணி அமைப்பு சார்பில் ராமநாதபுரம் மாவட்டத்திலும் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் அகில இந்திய புண்ணிய தலமான ராமேசுவரம் நகர் பகுதியில் இந்து முன்னணி சார்பில் பல்வேறு இடங்களில் வைப்பதற்காக விநாயகர் சிலைகள் ஆந்திராவில் இருந்து நேற்று ராமேசுவரம் பகுதிக்கு கொண்டுவரப்பட்டது.இவ்வாறு கொண்டுவரப்பட்ட இந்த சிலைகள் ஆஞ்சநேயர் கோவில் வளாகத்தில் பாதுகாப்பாக இறக்கி வைக்கப்பட்டுள்ளன. இந்த சிலைகளை இந்து முன்னணி மாவட்ட தலைவர் ராமமூர்த்தி பார்வையிட்டார்.

பிரதிஷ்டை

அப்போது அவர் கூறியதாவது:- வருகிற 18-ந் தேதி கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தி அன்று ராமேசுவரம் நகரில் பல்வேறு முக்கிய இடங்களில் 25 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து பூஜை செய்யப்படவுள்ளன. அதற்காக ஆந்திராவில் இருந்து 3 அடியிலிருந்து 9 அடி உயரம் வரையிலான விநாயகர் சிலைகள் ராமேசுவரத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளன. இந்த சிலைகள் அனைத்தும் இரண்டு நாட்களுக்கு முன்னதாக அந்தந்த பகுதிக்கு பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்படும்.

அதுபோல் தங்கச்சி மடத்தில் 5 இடங்களிலும், பாம்பனில் 10 இடங்களிலும் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளன. ராமேசுவரம், பாம்பன், தங்கச்சிமடம் பகுதிகளில் வைக்கப்படும்.

இந்த விநாயகர் சிலைகள் வருகின்ற 19-ந் தேதி ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு கடலில் கரைக்கப்படுகின்றன. சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் இந்த விநாயகர் சிலைகள் செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்