விநாயகர் சிலைகள் மருதையாற்றில் கரைப்பு
விநாயகர் சிலைகள் மருதையாற்றில் கரைக்கப்பட்டது.;
அரியலூர் நகரில் கடந்த 18-ந் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அந்தந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் பல விதமான வேடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு செய்தனர். ஐந்து நாட்களுக்கு பிறகு அந்த சிலைகளை ஆற்றில் கரைக்கும் விழா நடந்தது. பட்டு நூல்கார தெருவில் உள்ள கிருஷ்ணன் கோவில் முன்பு சுமார் 10-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலமாக பல்வேறு இடங்களில் இருந்து எடுத்து வரப்பட்டது. சின்ன கடை தெரு, வெள்ளாள தெரு, எம்.பி. கோவில் தெரு, தேரடி, சத்திரம், மேள அக்கிரகாரம் வழியாக மேளதாளங்கள் முழங்க வானவேடிக்கையுடன் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு மருதையாற்றில் போலீஸ் பாதுகாப்புடன் கரைக்கப்பட்டது.