தர்மபுரி நேதாஜி பைபாஸ் சாலையில் உள்ள தனியார் நிறுவனத்தில் விநாயகர் சிலை வைத்து வழிபாடு நடத்தப்பட்டது. அந்த சிலைக்கு தினமும் பூஜைகள் நடத்தப்படுவது வழக்கம். இந்த விநாயகர் சிலையை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த நிறுவன நிர்வாகிகள், இதுகுறித்து தர்மபுரி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.