விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டம்

கீழப்பாவூாில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது.

Update: 2023-09-19 19:00 GMT

பாவூர்சத்திரம்:

கீழப்பாவூர் விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 9-ந் தேதி தொடங்கி நேற்று வரை 10 நாட்கள் நடைபெற்றது. தினந்தோறும் காலையில் கணபதி ஹோமம், சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை, மாலையில் சாயரட்சை, தீபாராதனை, விஷேச அலங்காரம், 1,008 அர்ச்சனை, சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.

விநாயகர் சதுர்த்தி தினமான நேற்று முன்தினம் கணபதிஹோமம், கும்பஜெபம், விஷேச அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை, சிறப்பு அலங்காரம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோவில் அர்ச்சகர் ரவி பட்டாச்சாரி தலைமையில் செய்திருந்தனர்.


Tags:    

மேலும் செய்திகள்