விநாயகர் சதுர்த்தி விழா
பாலக்கோட்டில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது.
பாலக்கோடு:
விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி பாலக்கோடு ஆற்றங்கரையில் உள்ள விநாயகர் கோவில் முன்பு 11 அடி உயர விநாயகர் சிலை வைத்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து சாமிக்கு கொழுக்கட்டை, சுண்டல், பொரி, பழங்கள் ஆகியவற்றை படைத்து பக்தர்கள் வழிபட்டனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதேபோன்று பாலக்கோடு மந்தைவெளியில் உள்ள ராஜகணபதி கோவில் முன்பு 11 அடி உயர ராஜவிநாயகர் சிலை வைத்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.