'தமிழ்நாடு நாள்' விழாவையொட்டி மாணவிகளுக்கான விளையாட்டு போட்டிகள்
‘தமிழ்நாடு நாள்’ விழாவையொட்டி தேனியில் மாணவிகளுக்கான விளையாட்டு போட்டிகள் நடந்தது.
'தமிழ்நாடு நாள்' விழாவையொட்டி தேனி மாவட்ட விளையாட்டு அரங்கில் 18 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கான விளையாட்டு போட்டிகள் நடந்தன. ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், செஸ், இறகுப்பந்து, கேரம் ஆகிய போட்டிகள் நடந்தன.
இந்த போட்டிகளை மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தொடங்கி வைத்து பார்வையிட்டார். இதில் 23 பள்ளிகளை சேர்ந்த 244 மாணவிகள், 3 குழந்தைகள் இல்லங்களை சேர்ந்த 34 சிறுமிகள் கலந்துகொண்டனர். ஒவ்வொரு போட்டியிலும் முதலிடம் பெற்றவர்களுக்கு அடுத்த மாதம் (ஆகஸ்டு) 15-ந் தேதி சுதந்திர தின விழாவில் சாம்பியன் பட்டத்துடன் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்படவுள்ளது. 2 மற்றும் 3-வது இடம் பிடித்தவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.
இதில், முதன்மை கல்வி அலுவலர் இந்திராணி, மாவட்ட சமூக நல அலுவலர் சியாமளாதேவி மற்றும் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.