ஜி20 மாநாட்டு பிரதிநிதிகள் மாமல்லபுரம் வருகைபோலீஸ் சூப்பிரண்டு ஆய்வு

சென்னையில் வருகிற 24-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை 6 நாட்கள் பேரிடர் மேலாண்மை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த ஜி20 மாநாடு நடைபெறுகிறது.

Update: 2023-07-22 08:19 GMT

மாமல்லபுரம், 

சென்னை, கொல்கத்தா, மும்பை, புதுடெல்லி, திருவனந்தபுரம், பெங்களூரு, ஜோத்பூர், லக்னோ, ஐதராபாத், விசாகப்பட்டினம், உதய்பூர், கஜராகோ, காந்திநகர், சண்டிகர், புவனேஸ்வர், கொச்சி, வாரணாசி, கோவா, சிலிகுரி போன்ற நகரங்களில் பல்வேறு துறைகளின் சார்பாக பல்வேறு தலைப்புகளில் ஜி20 மாநாடு நடந்து வருகிறது. 

இந்த மாநாட்டில் பிரான்ஸ், ஜெர்மன், இத்தாலி, இங்கிலாந்து இந்தோனேசியா, ஆஸ்திரேலியா, தென் கொரியா, வடகொரியா, அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா, நார்வே, டென்மார்க் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த 300 பேர் பங்கேற்கின்றனர். மாநாட்டில் பங்கேற்க வரும் பிரதிநிதிகள் 300 பேரும் 2 குழுக்களாக மாமல்லபுரம் புராதன சின்னங்களை சுற்றி பார்க்க வருகிற 26, 28-ந்தேதியை தமிழக சுற்றுலாத்துறை ஏற்பாடு செய்துள்ளது. மாமல்லபுரம் வரும் வெளிநாட்டு விருந்தினர்களை எந்த வழியாக குளிர்சாதன பஸ்களில் பாதுகாப்பாக கடற்கரை கோவில், ஐந்துரதம், வெண்ணை உருண்டைக்கல் உள்ளிட்ட புராதன சின்னங்களுக்கு அழைத்து செல்வது, அவர்களுக்கு தமிழக கலாசாரப்படி எப்படி வரவேற்பது என்பது குறித்து தமிழக போலீஸ் துறையின் பாதுகாப்பு பிரிவு போலீஸ் சூப்பிரண்டு ராஜேந்திரன் நேற்று மாமல்லபுரம் வந்து புராதன சின்னங்களை ஆய்வு செய்தார். வெளிநாட்டு விருந்தினர்கள் வரும் போது சுற்றுலா பயணிகளுக்கு இடையூறு இல்லாமல் பாதுகாப்பு பணிகளை செய்யுமாறு போலீசாருக்கு அவர் அறிவுறுத்தினார். அவருடன் மாமல்லபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெகதீஸ்வரன், மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டா் ருக்மாங்கதன் மற்றும் பாதுகாப்பு துறை அதிகாரிகள், நுண்ணறிவு பிரிவு, உளவுத்துறை போலீசார் பலரும் வந்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்