சீறி பாய்ந்த மாட்டு வண்டிகள்
காரைக்குடி அருகே கோவில் திருவிழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. இதில் மாட்டு வண்டிகள் சீறிப்பாய்ந்தன.
காரைக்குடி அருகே கோவில் திருவிழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. இதில் மாட்டு வண்டிகள் சீறிப்பாய்ந்தன.
கோவில் பூச்சொரிதல் விழா
காரைக்குடி அருகே கானாடுகாத்தான் பரமனூர் காளியம்மன் கோவில் சந்தனகாப்பு மற்றும் பூச்சொரிதல் விழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் பள்ளத்தூர் சாலையில் நடைபெற்றது. இதில் மொத்தம் 44 வண்டிகள் கலந்துகொண்டு பெரியமாட்டு வண்டி பந்தயம், சின்ன மாட்டு வண்டி பந்தயம் என இருபிரிவாக நடைபெற்றது. முதலில் நடைபெற்ற பெரியமாட்டு வண்டி பந்தயத்தில் 12 வண்டிகள் கலந்துகொண்டு முதல் பரிசை அவனியாபுரம் மோகன் மற்றும் திருமலை கண்ணன் வண்டியும், 2-வது பரிசை சத்திரப்பட்டி ஜெயகிருஷ்ணன் மற்றும் உலகுபிச்சான்பட்டி ரமேஷ்ராஜா வண்டியும், 3-வது பரிசை புதுசுக்காம்பட்டி கவினேசன் வண்டியும், 4-வது பரிசை பூவாண்டிப்பட்டி நாச்சியார் வண்டியும் பெற்றது.
சின்ன மாட்டு வண்டி பந்தயம்
பின்னர் நடைபெற்ற சின்னமாட்டு வண்டி பந்தயத்தில் 32 வண்டிகள் கலந்து கொண்டு இரு பிரிவாக நடைபெற்றது. முதல் பிரிவில் முதல் பரிசை வடகுடி நெல்லியாண்டவர் மற்றும் அவனியாபுரம் மோகன் வண்டியும், 2-வது பரிசை பாகனேரி மதியாபுலிஆகாஸ் மற்றும் நெற்புகப்பட்டி ரிதன்யாசதீஷ்குமார் வண்டியும், 3-வது பரிசை கிடாரிப்பட்டி தேர்கொண்ட கருப்பர் வண்டியும், 4-வது பரிசை புதுப்பட்டி ஆதிக்ராஜா மற்றும் கொத்தமங்கலம் சேகர் ஆகியோர் வண்டியும் பெற்றது.
பின்னர் நடைபெற்ற இரண்டாவது பிரிவில் முதல் பரிசை பாகனேரி தொழிலதிபர் புகழேந்தி மற்றும் மதகுபட்டி ஆனந்த் ஆகியோர் வண்டியும், 2-வது பரிசை கானாடுகாத்தான் சோலையாண்டவர் துணை மற்றும் தேத்தாம்பட்டி நாகலிங்கம் வண்டியும், 3-வது பரிசை தல்லாம்பட்டி சூர்யா வண்டியும், 4-வது பரிசை வெளிமுத்தி வாகினி மற்றும் எரிச்சி கமல் வண்டியும் பெற்றது. வெற்றி பெற்ற வண்டிகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. சீறி பாய்ந்த வண்டிகளை பொதுமக்கள் பார்த்து ரசித்தனர்.