ராசிபுரம் எல்லை மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா-திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

ராசிபுரம் எல்லை மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது.

Update: 2022-09-01 18:00 GMT

ராசிபுரம்:

ராசிபுரம் டவுன் புதுப்பாளையம் சாலையில் பிரசித்தி பெற்ற எல்லை மாரியம்மன் கோவில் மற்றும் பாலமுருகன் கோவில் அமைந்துள்ளது. இங்கு மாரியம்மன் மற்றும் முருகன் தனித்தனி சன்னதிகளில் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகின்றனர். இந்த நிலையில் கோவிலில் திருப்பணிகள் முடிந்து நேற்று காலை கும்பாபிஷேக விழா நடந்தது. முன்னதாக பூர்ணா குதி, மகா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து யாகசாலையில் இருந்து கலசங்கள் எடுத்துவரப்பட்டு மங்கள வாத்தியங்கள் முழங்க கோவிலை சுற்றி வலம் வந்தது. பின்னர் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத விமான கலசத்தின் மீது புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தினர். அதன் பிறகு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாரதனை நடந்தது. கும்பாபிஷேக விழாவில் ராசிபுரம் மற்றும் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் செய்திகள்