பனை மரத்தில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பலி

கயத்தாறு அருகே பனை மரத்தில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பலியானார்.

Update: 2022-06-19 11:59 GMT

கயத்தாறு:

கயத்தாறு அருகே உள்ள சிவஞானபுரம் பஞ்சாயத்தை சேர்ந்த வாகைகுளம் வடக்கு தெருவை சேர்ந்த பொன்ராஜ் என்பவரின் மகன் தனபாலன் (வயது 24). இவர் பெயிண்டராக வேலை பார்த்து வந்தார். நேற்று காலையில் ஊருக்கு அருகில் உள்ள சொக்கலிங்கம் என்பவரின் தோட்டத்தில் உள்ள பனை மரத்தில் தனபாலன் ஏறினார். அப்போது திடீரென நிலை தடுமாறி அவர் மரத்திலிருந்து கீழே விழுந்து படுகாயமடைந்தார். அவரை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த கயத்தாறு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆண்டனி தீலீப், அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார். இதுகுறித்து கயத்தாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்