சாத்தான்குளத்திலிருந்து ஊட்டிக்கு அரசு விரைவு பஸ் வசதி தொடக்கம்

சாத்தான்குளத்திலிருந்து ஊட்டிக்கு அரசு விரைவு பஸ் வசதி தொடங்கப்பட்டுள்ளது.

Update: 2022-12-02 18:45 GMT

சாத்தான்குளம்:

சாத்தான்குளத்தில் இருந்து கோவை வழியாக ஊட்டிக்கு அரசு விரைவு பஸ் வசதி தொடக்க நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு ஊட்டிக்கு விரைவு பஸ் வசதியை தொடங்கி வைத்தார். இந்த பஸ் சாத்தான்குளத்தில் இருந்து திருச்செந்தூர், தூத்துக்குடி, பொள்ளாச்சி, கோவை, மேட்டுப்பாளையம் வழியாக ஊட்டிக்கு (தடம் எண் 632) சென்றடையும். இந்த நிகழ்ச்சிக்கு சாத்தான்குளம் முன்னாள் பேரூராட்சித் தலைவர் ஏ.எஸ். ஜோசப் தலைமை தாங்கினார். தாசில்தார் தங்கையா, மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் து. சங்கர் முன்னிலை வகித்தார். தொடர்ந்து மழையால் வீடு இடிந்து பாதிக்கப்பட்ட தொழிலாளி குடும்பத்துக்கு அரசு நிவாரண தொகையாக ரூ.4,100, அரசி, பருப்பு மற்றும் சொந்தநிதியில் இருந்து ரூ.5ஆயிரம் வழங்கினார்.

இதில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் பொருளாளர் எடிசன், சாத்தான்குளம் வடக்கு வட்டார தலைவர் பார்த்தசாரதி, சாத்தான்குளம் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் ஜோசப்அலெக்ஸ் லிங்கபாண்டி, யூனியன் கவுன்சிலர் சுதாகர், மாநில ஊடக பிரிவு செயலர் முத்துமணி, ஆழ்வார்திருநகரி வட்டாரத் தலைவர் கோதண்டராமன், தூத்துக்குடி தெற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் இசைசங்கர், துணைத் தலைவர் பாஸ்கர் ஸ்ரீவைகுண்டம் தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் பிளஸ்வின், சாத்தான்குளம் நகரத் துணைத் தலைவர் நாராயணன், மாவட்ட தி.மு.க. பிரதிநிதிகள் வேல்துரை, சரவணன், ஒன்றிய பொருளாளர் தாமஸ், நகர பொருளாளர் சந்திரன், நகர இளைஞரணி துணை அமைப்பாளர் செந்தில்முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மேலும், ஏரல் அருகே உள்ள பண்டாரவிளையில் இருந்து பெருங்குளம் வரை ரூ.68 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக சாலை போடும் பணி தொடக்க நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பிரம்மசக்தி, தெற்கு மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் சங்கர், பொருளாளர் எடிசன், பொதுச்செயலாளர் பிச்சையா, மாவட்ட இளைஞரணி தலைவர் இசை சங்கர், வட்டார தலைவர்கள் நல்லகண்ணு, சொரிமுத்து பிரதாபன், ஸ்ரீவைகுண்டம் யூனியன் கவுன்சிலர் பாரத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்