தாளவாடி அருகே மரத்தில் இருந்து பலாப்பழத்தை பறித்து தின்ற காட்டு யானை

தாளவாடி அருகே மரத்தில் இருந்து பலாப்பழத்தை காட்டு யானை பறித்து தின்றது.

Update: 2023-08-16 21:51 GMT

தாளவாடி

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் ஏராளமான காட்டு யானைகள் உள்ளன. இரவு நேரத்தில் வனப்பகுதியை விட்டு வெளியேறும் யானைகள் ஊருக்குள் புகுந்து விவசாயிகள் பயிரிட்டுள்ள வாழை, கரும்பு, மக்காச்சோளம் போன்ற பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. இதற்கிடையே நேற்று முன்தினம் இரவு தாளவாடி அருகே உள்ள நெய்தாளபுரம் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒரு காட்டு யானை கிராமத்தையொட்டி அமைந்துள்ள பகுதியில் நடமாடியது. மேலும் அப்பகுதியில் இருந்த பலாப்பழ மரத்துக்கு சென்ற காட்டு யானை 2 முன்னங்கால்களையும் மரத்தின் மீது வைத்து, துதிக்கையால் பலாப்பழத்தை பறித்து தின்றது. இதைப்பார்த்து அச்சம் அடைந்த கிராம மக்கள் தாளவாடி வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் அங்கு வந்த வனத்துறையினர் யானையை காட்டுக்குள் விரட்டிவிட்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்