மாணவ-மாணவிகளுக்கு கோடைகால இலவச பயிற்சி
மாவட்ட விளையாட்டு மைதானத்தில் மாணவ-மாணவிகளுக்கு கோடைகால இலவச பயிற்சி வருகிற 1-ந்தேதி தொடங்குகிறது.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில், திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் கோடைகால இலவச விளையாட்டு பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. இந்த பயிற்சி முகாம் வருகிற 1-ந்தேதி தொடங்கி 15-ந்தேதி வரை நடக்கிறது. தினமும் காலை 6 மணி முதல் 8.30 மணி வரையும், மாலை 4 மணி முதல் 6.30 மணி வரையும் பயிற்சி நடக்கிறது.
இதில் தடகளம், கூடைப்பந்து, கால்பந்து, கையுந்துபந்து, ஆக்கி ஆகிய விளையாட்டுகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த பயிற்சி முகாமில் சேரும் மாணவ-மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கப்படுகிறது. எனவே பயிற்சியில் சேர விரும்பும் மாணவ-மாணவிகள் வருகிற 1-ந்தேதி காலை 6 மணிக்கு, மாவட்ட விளையாட்டு மைதானத்துக்கு வந்து முகாமில் சேரலாம். இதுதொடர்பான கூடுதல் விவரங்களுக்கு கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள மாவட்ட விளையாட்டு அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என்று கலெக்டர் விசாகன் தெரிவித்துள்ளார்.