வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள இலவச சிறப்பு பஸ்கள்

வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள இலவச சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

Update: 2023-04-27 21:03 GMT

பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்துடன், தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகம் இணைந்து நடத்தும், மாபெரும் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நாளை (சனிக்கிழமை) பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ளது. முகாமிற்கு வேலை நாடுனர்கள் வருவதற்கு வசதியாக மாவட்டத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் இலவசமாக சிறப்பு பஸ் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பூலாம்பாடி, பில்லாங்குளம், பசும்பலூர், தேனூர், பாடாலூர், கொளக்காநத்தம், திருமாந்துறை, அகரம் சீகூர், களரம்பட்டி, கீழப்புலியூர் போன்ற பகுதிகளில் பஸ்கள் காலை 8 மணி மற்றும் காலை 9 மணிக்கு புறப்படும். மேலும் பெரம்பலூர் புதிய பஸ் நிலையம் மற்றும் பழைய பஸ் நிலையத்தில் இருந்து சிறப்பு பஸ் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்று கலெக்டர் கற்பகம் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்