இலவச கண் மருத்துவ முகாம்
நிலக்கோட்டையில் இலவச கண் மருத்துவ பரிசோதனை முகாம் நடந்தது.;
நிலக்கோட்டை அனைத்து விஸ்வகர்மா காயத்ரி தங்கம், வெள்ளி நகை உற்பத்தியாளர்கள் முன்னேற்ற சங்கமும், நிலக்கோட்டை விஸ்வகுல பித்தளை பாத்திர சங்கமும் மற்றும் கீதா கண் மருத்துவமனை இணைந்து இலவச கண் பரிசோதனை மருத்துவ முகாமை நிலக்கோட்டையில் நடத்தியது. இதனை நிலக்கோட்டை தி.மு.க. நகர செயலாளர் ஜோசப் தலைமை தாங்கி, தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு நகைத் தொழிலாளர் மத்திய சங்கத்தின் மாநில இணை பொதுச்செயலாளர் சந்திரசேகரன், சங்க பொருளாளர் பாலசுப்பிரமணியன், செயலாளர் கணேசன், சங்க நிர்வாகி சதீஷ்குமார், நிலக்கோட்டை பித்தளை பாத்திர தொழிலாளர் நல சங்க தலைவர் முத்து, செயலாளர் தனசேகரன், கீதா கண் மருத்துவமனை மேலாளர் பாலசுப்பிரமணியன் மற்றும் சங்க நிர்வாகிகள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.