இட்டமொழி:
இட்டமொழி பஞ்சாயத்து சுப்பிரமணியபுரத்தில் காசநோய் கண்டறியும் இலவச மருத்துவ முகாம் நேற்று நடைபெற்றது. இட்டமொழி பஞ்சாயத்து தலைவர் சுமதி சுரேஷ் முகாமை தொடங்கி வைத்தார். டாக்டர் வினித் சிகிச்சை அளித்தார். நடமாடும் இலவச டிஜிட்டல் நெஞ்சக எக்ஸ்ரே வாகனம் மூலம் 41 பேருக்கு எக்ஸ்ரே பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. ஏற்பாடுகளை சுகாதார மேற்பார்வையாளர் சண்முகம், சுகாதார ஆய்வாளர் வடிவேல் முருகன் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.