இலவச மருத்துவ முகாம்

கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

Update: 2023-09-24 19:42 GMT

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா கொளக்காநத்தம் கிராமத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி தி.மு.க. மருத்துவ அணி சார்பில் கொளக்காநத்தம் அரசு மேல்நிலைப்பள்ளியில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. ஆலத்தூர் ஒன்றிய குழுத்தலைவரும், கிழக்கு ஒன்றிய செயலாளருமான கிருஷ்ணமூர்த்தி மருத்துவ முகாமை தொடங்கி வைத்து பேசினார். இம்முகாமில் பொது மக்களுக்கு சர்க்கரை நோய் கண்டறிதல், ரத்தக்கொதிப்பு, புற்றுநோய், கண் புரை, மகப்பேறு மருத்துவம், குழந்தைகள் நலம், தோல் நோய் மருத்துவம், பல் மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, எலும்பு மூட்டு அறுவை சிகிச்சை, காது மூக்கு தொண்டை மருத்துவம் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்