சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் இலவச திருமணம்
திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் இலவச திருமணம் நடந்தது.
திருவெண்காடு:
இந்து சமய அறநிலையத்துறை மூலம் ஏழை மணமக்களுக்கு துறை சார்பில் இலவச திருமணங்கள் நடத்தி வைக்க வேண்டுமென தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி நேற்று திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் ஒரு ஜோடிக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. சட்டநாதபுரத்தை சேர்ந்த மணிகண்டன்-பிரசன்னாதேவி ஜோடிக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் நிவேதா முருகன் எம்.எல்.ஏ. மாங்கல்யத்தை எடுத்துக் கொடுத்து திருமணம் நடத்தி வைத்து, துறை சார்பில் ரூ.70 ஆயிரம் மதிப்பிலான சீர்வரிசை பொருட்களை வழங்கினார். இதில் இந்து சமய அறநிலையத்துறை துணை ஆணையர் முத்துராமன், ஒன்றிய குழு தலைவர் கமல ஜோதி தேவேந்திரன், கோவில் நிர்வாக அதிகாரி முருகன், தி.மு.க. ஒன்றிய செயலாளர் அமிர்த விஜயகுமார், தலைமை செயற்குழு உறுப்பினர் முத்து மகேந்திரன், ஒன்றிய துணைச் செயலாளர் உத்திர மூர்த்தி, கோவில் மேலாளர் கண்ணன் உள்ளிட்ட திரளானவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் அர்ச்சகர் பாபு சிவாச்சாரியார் நன்றி கூறினார்.