பண்பொழி கோவிலில் இலவச திருமணம்

பண்பொழி கோவிலில் இலவச திருமணம் நடைபெற்றது.

Update: 2023-07-07 18:45 GMT

கடையநல்லூர்:

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் இலவச திருமணங்களை நடத்தி வைக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி இலவச திருமணம் நடத்தி வைக்கப்பட்டு, புதுமண தம்பதிக்கு ரூ.50 ஆயிரம் மதிப்பிலான சீர்வரிசை பொருட்கள் வழங்கப்படுகிறது.

அதன்படி பண்மொழி திருமலைக்குமார சுவாமி கோவிலில் நேற்று காலை ஒரு ஜோடிக்கு இலவச திருமணம் நடைபெற்றது. பின்னர் அவர்களுக்கு சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை மண்டல இணை ஆணையர் அன்புமணி, கோவில் உதவி ஆணையர் கோமதி, சரக ஆய்வர் சேதுராமன், தென்காசி மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் சுப்பையா, அறங்காவலர் குழு உறுப்பினர்கள் காலசாமி, வேல்முருகன், சண்முகவடிவு, பண்பொழி பேரூராட்சி தலைவர் ராஜராஜன், ரமேஷ் பட்டர், லட்சுமணன் மற்றும் மணமக்கள் வீட்டார் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்