மாற்றுத்திறனாளி தம்பதிக்கு இலவச வீட்டு மனை பட்டா

கள்ளக்குறிச்சியில் மாற்றுத்திறனாளி தம்பதிக்கு இலவச வீட்டு மனை பட்டா கலெக்டர் ஷ்ரவன்குமார் உத்தரவு

Update: 2023-05-22 18:45 GMT

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி அருகே புது உச்சிமேடு பகுதி கோ.பட்டியை சேர்ந்த பெருமாள் மகள் சுமதி(வயது 38). இவர் 2 கால்களும் பாதிக்கப்பட்டு நடக்க முடியாத மாற்றுத்திறனாளி ஆவார். இவரது தாய், தத்தை கடந்த 15 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டதால் ஆதரவில்லாமல் இருந்து வந்தார். சங்கராபுரம் தாலுகா ஊராங்கணி கிராமத்தை சேர்ந்த சேவிக்கவுண்டர் மகன் சேகர்(37). இவரும் 2 கால்களும் பாதிக்கப்பட்டு நடக்கமுடியாத மாற்றுத்திறனாளி ஆவார்.

இந்த நிலையில் சேகர், சுமதி இருவருக்கும் மாற்றுதிறனாளிகள் நலச்சங்கம் மூலம் நேற்று காலை வடபூண்டி ஸ்ரீ கைலாயநாதர் கோவிலில் திருமணம் செய்து வைத்தனர். பின்னர் கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்த மாற்றுத்திறனாளி தம்பதியை கலெக்டர் ஷ்ரவன்குமார் வாழ்த்தியதோடு, அவர்களுக்கு இலவச வீட்டு மனைப்பட்டா மற்றும் அரசு திட்டத்தில் வீடு கட்டித்தரவும், பெட்டிக்கடை வைப்பதற்கு கடனுதவி வழங்க நடவடிக்கை எடுக்கவும் சம்பந்தப்பட்டதுறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். அப்போது மாற்றுத்திறனாளி நல அலுவலர் சுப்ரமணி மற்றும் மாற்றுத்திறனாளிகள் நல சங்க உறுப்பினர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்