விவசாயிகளுக்கு இலவச உரம் வினியோகம்

விவசாயிகளுக்கு இலவச உரம் வினியோகம் செய்யப்பட்டது.

Update: 2023-07-13 18:45 GMT

மயிலாடுதுறை மாவட்டம், மணல்மேட்டில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் குறுவை தொகுப்பு திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு இலவச உரம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மயிலாடுதுறை வேளாண்மைத்துறை இணை இயக்குனர் சேகர் தலைமை தாங்கினார். இதில் முடிகண்டநல்லூர், வக்காரமாரி ஆகிய பகுதிகளை சேர்ந்த விவசாயிகளுக்கு இலவசமாக உரங்களை, இணை இயக்குனர் வழங்கினார். நிகழ்ச்சியில் குறுவை தொகுப்பு திட்டத்தின் கீழ் பயன்பெறும் விவசாயிகள், அவர்களது செல்போனுக்கு வேளாண்மைத்துறையில் இருந்து கடவுச்சொல் வந்த உடன் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத்திற்கு சென்று இலவசமாக உரங்களை பெற்றுக்கொள்ளலாம் என்று வேளாண்மை துறையினர் கூறினர். நிகழ்ச்சியில் கூட்டுறவுத்துறை இணை இயக்குனர் தயாளவிநாயகன், அமுல்ராஜ், கூட்டுறவு துணை பதிவாளர் ராஜேந்திரன், துணை வேளாண்மை அலுவலர் பிரபாகரன், உதவி வேளாண்மை அலுவலர் மணிமாறன் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்