கும்மிடிப்பூண்டி போலீஸ் நிலையத்தில் பொதுமக்களுக்கு இலவச முகக்கவசம்

கும்மிடிப்பூண்டி போலீஸ் நிலையத்தில் பொதுமக்களுக்கு இலவச முகக்கவசம் தருவதோடு மட்டுமன்றி கொரோனா விதிமுறைகளும் எடுத்து கூறி விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர்.

Update: 2023-04-20 10:58 GMT

கொரோனா பரவல் காரணமாக பொது இடங்களில் முகக்கவசம் அணிய வேண்டும் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என தமிழக அரசு வலியுறுத்தி உள்ளது. இதனையடுத்து திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் கோர்ட்டு வாளகம் மற்றும் போலீஸ் நிலையம் ஆகியவற்றில் அனைவரும் முகக்கவசம் அணிந்தவாறு தற்போது பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் கும்மிடிப்பூண்டி போலீஸ் நிலையத்தில் புகார் மனு அளிக்க வருபவர்களுக்கு இலவச முகக்கவசம் வழங்க போலீசார் தரப்பில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அதனடிப்படையில் போலீஸ் நிலையம் வரும் அனைவருக்கும் போலீசார் முகக்கவசம் தருவதோடு மட்டுமன்றி கொரோனா விதிமுறைகளும் எடுத்து கூறி விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்