அம்பை:
அம்பை பூக்கடை பஜார் இந்து தொடக்கப்பள்ளியில் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்க நிதி உதவியுடன் கோபாலசமுத்திரம் கிராம உதயம் அமைப்பு, நெல்லை அரவிந்த் கண் ஆஸ்பத்திரி சார்பில், இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது. கிராம உதய நிர்வாக வக்கீல் புகழேந்தி பகத்சிங் தலைமை தாங்கி, முகாமை தொடங்கி வைத்தார்.
கிராம உதய குழு தலைவர் கலா, நிர்வாகிகள் வேலம்மாள், விஜயா, பிரேமா ஆகியோர் வாழ்த்தி பேசினர். அரவிந்த் கண் ஆஸ்பத்திரி டாக்டர் மகேஸ்வரி தலைமையிலான குழுவினர் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்தனர். இதில் 37 பேர் அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டனர். கிராம உதய பொறுப்பாளர் கணேசன் நன்றி கூறினார்.