இலவச கண் சிகிச்சை முகாம்

கயத்தாறு அருகே மானங்காத்தான் கிராமத்தில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது.;

Update:2023-03-20 00:15 IST

கயத்தாறு:

கயத்தாறு அருகே உள்ள தெற்கு இலந்தைகுளம் பஞ்சாயத்து மானங்காத்தான் கிராமத்தில் இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது. நெல்லை ஐஸ்வர்யா கண் மருத்துவமனை சார்பில் நடைபெற்ற இந்த முகாமிற்கு தெற்கு இலந்தைகுளம் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் செல்லையா தலைமை தாங்கினார். பஞ்சாயத்து தலைவர் செல்வி ரவிக்குமார் முகாமை தொடங்கி வைத்தார். துணைத் தலைவர் லட்சுமி பண்டாரம் முன்னிலை வகித்தார்.

நெல்லை கண் ஒளி பரிசோதனையாளர் இசக்கிராஜா மற்றும் மருத்துவ உதவியாளர்கள் மருத்துவ பரிசோதனை செய்தனர். முகாமில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு கிட்டப்பார்வை, தூரப்பார்வை மற்றும் கண்புரை போன்ற பரிசோதனைகள் செய்யப்பட்டது. முகாமில் சுமார் 250-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பரிசோதனை செய்து கொண்டனர். இதில் 25-க்கும் மேற்பட்டோர் மேல் சிகிச்சைக்காக நெல்லை ஐஸ்வர்யா கண் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். இதற்கான ஏற்பாடுகளை பஞ்சாயத்து அலுவலர்கள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்