இலவச கண் சிகிச்சை முகாம்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு கடையநல்லூர் அருகே இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது.;

Update:2023-03-02 00:15 IST

கடையநல்லூர்:

கடையநல்லூர் ஒன்றியம் புன்னையாபுரம் ஊராட்சி சிங்கிலிப்பட்டியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு அகர்வால் கண் மருத்துவமனை, ஆதிரா டயக்னோசிஸ் கலெக்சன் சென்டர் (தைராய்டு), ஒன்றிய கவுன்சிலர் சிங்கிலிபட்டி மணிகண்டன் ஆகியோர் இணைந்து சிங்கிலிபட்டி இந்து நடுநிலைப்பள்ளி வளாகத்தில் இலவச கண் சிகிச்சை பரிசோதனை முகாம் நடைபெற்றது.

பள்ளி தலைமை ஆசிரியை முனியாத்தாள் தலைமை தாங்கினார். பஞ்சாயத்து தலைவர் திலகவதி கண்ணன், ம.தி.மு.க. முத்துராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். காங்கிரஸ் மூத்த தலைவர் துரைச்சாமிபாண்டியன், புன்னையாபுரம் ஒன்றிய கவுன்சிலர் சிங்கிலிபட்டி மணிகண்டன் ஆகியோர் முகாமை தொடங்கி வைத்தனர்.

முகாமில் டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை மருத்துவர்கள் தலைமையிலான மருத்துவ குழுவினர் பங்கேற்று சுமார் 300-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு இலவசமாக கண் பரிசோதனை செய்தனர். முகாமில் தி.மு.க. முன்னாள் கிளை செயலாளர் பெருமாள்சாமி, கிளை செயலாளர்கள் சமுத்திரக்கனி, முருகேசன், அவைத்தலைவர் நாகராஜ், முத்துப்பாண்டி, பாலசுப்பிரமணியன், முத்துக்குமார், மகேந்திரன், ஆகியோர் கலந்து கொண்டனர். முகாம் ஒருங்கிணைப்பாளர் அறிவானந்தம் நன்றி கூறினார். முன்னதாக இந்து நடுநிலைப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு ஒன்றிய கவுன்சிலர் சிங்கிலிபட்டி மணிகண்டன் இனிப்பு வழங்கினார்.

Tags:    

மேலும் செய்திகள்