இலவச கண் சிகிச்சை முகாம்

நாங்குநேரி அருகே உள்ள அம்பலம் கிராமத்தில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.

Update: 2022-12-29 20:00 GMT

இட்டமொழி:

நாங்குநேரி அருகே உள்ள அம்பலம் கிராமத்தில் நெல்லை அகர்வால் கண் மருத்துவமனை சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. அரியகுளம் பஞ்சாயத்து தலைவர் சுப்புலட்சுமி வசந்தகுமார் முகாமை தொடங்கி வைத்தார். பார்வை குறைபாடு, கண்புரை, கண்ணில் தசை வளர்ச்சி மற்றும் கண்கண்ணாடி வழங்குதல் போன்ற ஆலோசனைகள் மற்றும் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டது. முகாமில் டி.வி.எஸ். கள அலுவலர்கள் அந்தோணி தங்கராஜ், மாணிக்கம், கிராம சுகாதார செவிலியர் அன்னசிந்தியா, சுகாதார பணியாளர்கள் ஸ்ரீதேவி, உச்சிமகாளி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்