கடையம்;
கோவிந்தபேரி ஊராட்சியில் ஐஸ்வர்யா கண் பரிசோதனை மையம், கோவிந்தபேரி ஊராட்சி மன்றம் இணைந்து இலவச கண் பரிசோதனை முகாமை சமுதாய நலக்கூடத்தில் நடத்தியது. தென்காசி மாவட்ட பஞ்சாயத்து கூட்டமைப்பு தலைவர் டி.கே.பாண்டியன் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.பி. ராமசுப்பு முகாமை தொடங்கி வைத்தார்.
முகாமில் பொதுமக்களுக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டு, பார்வை குறைபாடுள்ளவர்களுக்கு இலவச கண் கண்ணாடிகள் வழங்கப்பட்டது. பஞ்சாயத்து துணைத் தலைவர் இசேந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.