இலவச கண் பரிசோதனை முகாம்

கலவையில் இலவச கண் பரிசோதனை முகாம்;

Update:2022-07-07 23:47 IST

கலவை

கலவை அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், லயன்ஸ் சங்கம், சென்னை அரவிந்த் கண் மருத்துவமனை ஆகியவை இணைந்து 178-வது இலவச கண் பரிசோதனை முகாமை நடத்தின.

முகாமுக்கு திமிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் லதா தலைமை தாங்கினார். முகாமில் 540 பேர் பங்கேற்றனர்.

அதில் 227 பேருக்கு கண் சிகிச்சை மேற்கொள்ள பரிந்துரை செய்யப்பட்டு சென்னை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

முகாமுக்கான ஏற்பாடுகளை மதிமாறன், சீனிவாசன் ஆகியோர் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்