இலவச வேட்டி, சேலை வழங்கும் விழா

தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி தி.மு.க. சார்பில் இலவச வேட்டி, சேலை வழங்கும் விழா நடைபெற்றது.

Update: 2023-08-30 23:00 GMT

தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி தி.மு.க. சார்பில் இலவச வேட்டி, சேலை வழங்கும் விழா கன்னிவாடியில் நடந்தது. இதற்கு திண்டுக்கல் மாவட்ட தி.மு.க. பொருளாளர் சத்தியமூர்த்தி தலைமை தாங்கினார். பின்னர் அவர் பொதுமக்களுக்கு வேட்டி, சேலைகளை வழங்கினார். விழாவில் கன்னிவாடி நகர தி.மு.க. செயலாளர் இளங்கோவன், மாவட்ட பிரதிநிதி பெருமாள், அவைத்தலைவர் ஷர்புதீன், கிளை செயலாளர்கள் முத்துச்சாமி, பூமி பாலன், மயில்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்