இலவச கட்டாய கல்வி: தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்களுக்கு 1¼ லட்சம் பேர் விண்ணப்பம் - இன்று கடைசி நாள்

இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் சேருவதற்கான விண்ணப்பப் பதிவு இன்றுடன் நிறைவு பெற உள்ளது.

Update: 2023-05-18 02:10 GMT

சென்னை,

இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ், தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்களில் ஏழை குழந்தைகள் சேர்க்கப்பட்டு, அவர்களுக்கு கல்வி கற்றுக்கொடுக்கப்பட்டு வருகிறது.

அவர்களுக்கான கல்வி கட்டணத்தை பள்ளிகளுக்கு, அரசு செலுத்தும். அந்த வகையில் இதுவரை இந்த திட்டத்தின் கீழ் 3 லட்சத்து 98 ஆயிரம் குழந்தைகள் தனியார் பள்ளிகளில் சேர்க்கப்பட்டு இருக்கிறார்கள்.

இதன் தொடர்ச்சியாக நடப்பு ஆண்டில் 7,738 தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்களின் கீழ் சுமார் 85 ஆயிரம் இடங்களில் சேருவதற்கான விண்ணப்பப்பதிவு கடந்த மாதம் (ஏப்ரல்) 20-ந்தேதி தொடங்கியது. இதுவரை ஒரு லட்சத்து 32 ஆயிரத்து 872 பேர் விண்ணப்பப்பதிவு செய்து உள்ளனர்.

இதற்கான விண்ணப்பப் பதிவு இன்றுடன் (வியாழக்கிழமை) நிறைவு பெற உள்ளது. விருப்பம் உள்ள பெற்றோர்கள் rte.tnschools.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

Tags:    

மேலும் செய்திகள்