மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்கள்
மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பபட்டன.
காரைக்குடி
கல்லல் ஊராட்சி ஒன்றிய விசாலயங்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் சார்பில் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் கல்லல் யூனியன் சேர்மன் சொர்ணம் அசோகன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார். இதில், கோப்பெருந்தேவி அறக்கட்டளை நிறுவுனர் கல்லல் கரு.அசோகன், முத்துராமலிங்கம் அம்பலம், ஊராட்சி மன்ற தலைவர் சொர்ணம், தலைமை ஆசிரியர் (பொறுப்பு) வன்மீகநாதன் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.