அரசு பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்கள்

கள்ளக்குறிச்சி அருகே அரசு பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டன.;

Update:2022-09-29 00:15 IST

கள்ளக்குறிச்சி, 

கள்ளக்குறிச்சி அருகே சோமண்டார்குடி அரசு பள்ளியில் தமிழக அரசின் சார்பில் மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா நடைபெற்றது. இதற்கு ஒன்றியக்குழு தலைவர் அலமேலு ஆறுமுகம் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் உதயசூரியன் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு ரூ.6 லட்சத்து 31 ஆயிரம் மதிப்பில் 117 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார். இதில் கள்ளக்குறிச்சி வடக்கு ஒன்றிய தி.மு.க.செயலாளர் அரவிந்தன், சின்னசேலம் வடக்கு ஒன்றிய செயலாளர் அன்புமணிமாறன், மாவட்ட கவுன்சிலர் அகிலாபானு அருள் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள், பள்ளி மேலாண்மை குழு நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்